தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/59 வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் முதியவர்

59 வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் முதியவர்

59 வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் முதியவர்


UPDATED : அக் 03, 2026 10:57 AM

ADDED : அக் 03, 2026 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 10:57 AM ADDED : அக் 03, 2026 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷில்லாங்:
மேகாலயாவைச் சேர்ந்த சில்வெஸ்டர் ஷடாப், 59, என்பவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி 37 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது மீண்டும் 10ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் ரி-போய் மாவட்டம் தத்ராங் உம்ன்கெம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷடாப். குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக 1989ல் பள்ளிப் படிப்பை நிறுத்தினார். குடும்பத்தை கவனிப்பதற்காக கல்வியை கைவிட்டாலும், படிப்பை முடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் தொடர்ந்து இருந்தது.

இந்நிலையில், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு மீண்டும் கல்வி கற்க வாய்ப்பு அளிக்கும் மேகாலயா அரசின், 'மீண்டும் கல்வி கற்கும் திட்டம்' ஷடாப்புக்கு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வயது வரம்பின்றி 10ம் வகுப்பு படிப்பை முடித்து தேர்வு எழுத முடியும்.

இந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் மேகாலயா முழுவதும் பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் 9,767 பேர் தனித்தேர்வர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களில் அதிக வயதுடையவர் ஷடாப். மேகாலயா பள்ளிக் கல்வி வாரியம் மற்றும், 'எம்பவர்' அமைப்பு இணைந்து இந்த இரண்டாவது வாய்ப்பு கல்வித் திட்டத்தை செயல்படுத்துகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us