தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் அவசரநிலை செயல்திட்டம் கட்டாயம்

பள்ளிகளில் அவசரநிலை செயல்திட்டம் கட்டாயம்

பள்ளிகளில் அவசரநிலை செயல்திட்டம் கட்டாயம்


UPDATED : செப் 30, 2026 06:09 PM

ADDED : செப் 30, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2026 06:09 PM ADDED : செப் 30, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில், பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும்.

இதற்காக, பள்ளியின் பாதுகாப்பு நிலையை மாதந்தோறும் ஆய்வு செய்து, விவரங்களை பள்ளி பாதுகாப்பு பதிவேட்டில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை, மின்சார பாதுகாப்பு, கழிவுநீர் மற்றும் நீர்த்தொட்டிகள், திறந்த கிணறு, குழிகள், ஆபத்தான மரங்கள், தீத்தடுப்பு வசதிகள், ஆய்வக ரசாயனப் பொருட்கள், சமையலறை மற்றும் சத்துணவு மையம், மாணவர் போக்குவரத்து உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

ஆய்வில் கண்டறியப்படும் குறைபாடுகளை உடனடியாக சரிசெய்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் புதுப்பிக்கப்பட்ட அவசரகால தொடர்பு எண்கள், தொடர்புடைய அலுவலர்களின் பட்டியல் பராமரிக்கப்பட வேண்டும்.

அவசரநிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய எளிமையான பள்ளி அவசரநிலை செயல்திட்டம், ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us