ஆக., 1ல் அறிமுகமாகிறது வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்
ஆக., 1ல் அறிமுகமாகிறது வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்
UPDATED : ஜூலை 26, 2025 12:00 AM
ADDED : ஜூலை 26, 2025 09:56 AM

புதுடில்லி:
வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம், வரும் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளில், 3.50 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்குவிக்கும் விதமாக, 99,446 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா என்ற திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் வரும் 1ம் தேதி முதல் 2027 ஜூலை 31ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1.92 கோடி பயனாளிகள் பயன்பெற உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் இரு வகைகளைக் கொண்டுள்ளது. முதல் வகையில், முதல்முறையாக பணிக்கு சேருபவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், இரண்டாவது வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் முதலாளிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஊக்கத்தொகை வழங்கும் விதமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.