UPDATED : மார் 20, 2026 02:53 PM
ADDED : மார் 20, 2026 02:54 PM
அ நிறம் | அளவு
திருப்பத்தூர்:
பூலாங்குறிச்சி வ.செ.சிவ., அரசு கலைக் கல்லூரியில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடந்தது.
பொறுப்பு முதல்வர் வடிவேல் தலைமை தாங்கினார். கணிதத்துறை விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மதுரை மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி நிறுவன மேலாளர் சிவ சுப்பிரமணியன், அலுவலர் தெய்வலிங்கம் பங்கேற்றனர்.
பிளாஸ்டிக் தொழில் நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள், தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் மத்திய மாநில அரசின் நிதி உதவி குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் அறிமுக உரையாற்றினார். விரிவுரையாளர் முருகேசன் நன்றி கூறினார்.
