தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏனாத்துார் சங்கரா பல்கலையில் மாணவ - மாணவியர் சேர்க்கை துவக்கம்

ஏனாத்துார் சங்கரா பல்கலையில் மாணவ - மாணவியர் சேர்க்கை துவக்கம்

ஏனாத்துார் சங்கரா பல்கலையில் மாணவ - மாணவியர் சேர்க்கை துவக்கம்


UPDATED : ஜன 26, 2026 08:56 PM

ADDED : ஜன 26, 2026 08:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2026 08:56 PM ADDED : ஜன 26, 2026 08:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், 2026 - 27 கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் துவங்கியது.

சங்கரா பல்கலையில், பொறியியல், கலை மற்றும் அறிவியல், மேலாண்மை, சட்டம், கல்வி, ஆயுர்வேதம், துணை மருத்துவம் மற்றும் முனைவர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தரமான கல்வியை வழங்கி வருகிறது.

இந்த கல்வியாண்டின் முக்கிய அம்சமாக, 'பூஜ்ய காஞ்சி மஹா சுவாமியின் கல்வி உதவித்தொகைத் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிவில், கணினி அறிவியல், மின்னணு மற்றும் தொடர்பியல், மின்சாரம் மற்றும் மின்னணு, இயந்திரவியல் பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கும் 100 சதவீதம் கல்விக் கட்டண உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் இதற்கு தகுதியுடையவர்கள்.

மேலும், பிளஸ் 2, ஜெ.இ.இ., சி.யு.இ.டி., தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு கல்விக் கட்டண தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பிளஸ் 2 பயின்ற மாணவ, மாணவியர் அல்லது மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆகியோருக்கு, பொறியியல் பாடப் பிரிவுகளில் சிறப்பு கல்வி கட்டணம் வழங்கப் படுகிறது.

பெண்கள் மட்டும் பயிலும் பி.ஏ., எல்.எல்.பி., பி.பி.ஏ., எல்.எல்.பி., மற்றும் எல்.எல்.பி., ஆகிய சிறப்பு சட்டப் பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us