sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ போட்டிகளில் பங்கேற்க ஊக்கம் தர வேண்டும்

போட்டிகளில் பங்கேற்க ஊக்கம் தர வேண்டும்

போட்டிகளில் பங்கேற்க ஊக்கம் தர வேண்டும்


UPDATED : அக் 08, 2024 12:00 AM

ADDED : அக் 08, 2024 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2024 12:00 AM ADDED : அக் 08, 2024 09:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தொழில்முனைவோர் பயிற்சி



ட்ரோன் தயாரிப்பு, வாகனங்கள் கண்டுபிடிப்பு, சாப்ட்வேர் மற்றும் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு போன்றவற்றில், தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க தங்களது மாணவர்களை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஊக்கப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல், புதிய கண்டுபிடிப்புகள் வழியே, மாணவர்களை தொழில் முனைவோராகவும் உருவாக்க வேண்டும்.

அதன்படி, எங்கள் மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் பயிற்சிகள் வழங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தவும், தொழிற்துறையினருடன் இணைந்து செயல்படுவது அவசியம். கல்லுாரி வளாகத்தில், மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்படுத்துவதும், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதும் முக்கியம்.

பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று, கண்டுபிடிப்பாளர்களாகவும், தொழில் முனைவோராகவும் உருவாவதற்கு கல்வி நிறுவனங்களின் துணை அவசியம்.

தொழில்நுட்ப கற்பித்தல், திறன் வளர்ப்பு திட்டங்கள் ஆகியவற்றின் மீது மாணவர்களுக்கு சிறந்த நம்பிக்கை ஏற்படும் வகையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். இங்கு படித்தால், தொழில்நுட்பத்தை சிறப்பாக கற்று கொள்வதுடன், நிச்சயமாக நல்ல சம்பளத்துடன் பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சேரலாம் என்ற எண்ணத்தையும் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். படித்து முடித்ததும், முதலில் வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்வதோடு, படிப்படியாக தொழில் முனைவோராக மாற வேண்டும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us