தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் நாளிதழ் நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி

தினமலர் நாளிதழ் நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி

தினமலர் நாளிதழ் நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி


UPDATED : ஜூன் 25, 2025 12:00 AM

ADDED : ஜூன் 25, 2025 08:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2025 12:00 AM ADDED : ஜூன் 25, 2025 08:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தினமலர் நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி வரும், 28ம் தேதி நடக்கிறது.

தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங், 2025 வழிகாட்டி நிகழ்ச்சி, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் வரும், 28 ம் தேதி நடக்கிறது.

கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், சேரன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும், கல்வியாளர்கள் நேரடி விளக்கம் அளிக்கின்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இந்தாண்டு எந்த படிப்புக்கு வரவேற்பு இருக்கும், எந்த பாடத்துக்கு என்ன எதிர்காலம், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது உள்ளிட்ட அனைத்து விளக்கங்களும் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில், வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் எனும் தலைப்பில், கல்வி ஆலோசகர் அஸ்வின், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் ஆகியோர், விரிவான ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

கவுன்சிலிங்கில் பங்கேற்கவுள்ள ஒவ்வொரு மாணவரும், பெற்றோரும் மிஸ் பண்ணக்கூடாத முக்கிய நிகழ்ச்சி இது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us