UPDATED : மே 06, 2024 12:00 AM
ADDED : மே 06, 2024 11:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான அட்டவணையை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
இன்று (06-02-2024) முதல் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 6தேதி ஆகும். விண்ணப்பப்படிவத்துடன் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஜூன் 12ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக ஜூன் 13 முதல் 30ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கப்படும். ஜூலை 10ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
கலந்தாய்வு தேதிகள் ஏஐசிடிஇ-ன் கல்விசார் அட்டவணைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.