மதுரை, சிவகாசியில் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி
மதுரை, சிவகாசியில் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி
UPDATED : ஜூலை 08, 2024 12:00 AM
ADDED : ஜூலை 08, 2024 09:22 PM
மதுரை:
தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பாக மாணவர்களுக்கான தினமலர் வழிகாட்டி 2024 நிகழ்ச்சி ஜூலை 13ல் தேனி பாரஸ்ட் ரோடு அன்னப்பராஜா மஹாலில் காலை 10:00 - 1:00 மணிக்கும், ஜூலை 14ல் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் காலை 10:00 - 1:00 மணிக்கும், மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில் மதியம் 3:00 - 6:00 மணிக்கும் நடக்கின்றன.
இந்தாண்டு இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்டில் இணையவழியில் நடக்கவுள்ளது. ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10ல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இக்கலந்தாய்வு எப்படி நடக்கும். மாணவர்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் நலன் கருதி தினமலர் சார்பில் இந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் இன்ஜி., கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் கல்வியாளர்கள் நேரடியாக விளக்கம் அளிக்கின்றனர். இந்தாண்டு எந்த படிப்புக்கு மவுசு அதிகம், என்ன பாடப்பிரிவுக்கு எப்படி எதிர்காலம் உள்ளது, கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது, சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எவ்வாறு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
நிகழ்ச்சியில், இன்ஜி., கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (டி.என்.இ.ஏ.,) செயலாளர் புருேஷாத்தமன், வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் பேசுகின்றனர்.
இந்நிகழ்ச்சியை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் காலேஜ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகியன இணைந்து வழங்குகின்றன. அனுமதி இலவசம்.
வாருங்கள் மாணவர்களே உங்கள் கலந்தாய்வு சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு இது.