sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவிகள் விரும்பும் இன்ஜினியரிங் படிப்புகள்!

/

மாணவிகள் விரும்பும் இன்ஜினியரிங் படிப்புகள்!

மாணவிகள் விரும்பும் இன்ஜினியரிங் படிப்புகள்!

மாணவிகள் விரும்பும் இன்ஜினியரிங் படிப்புகள்!


UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM

ADDED : ஜூலை 01, 2024 10:57 AM

Google News

UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM ADDED : ஜூலை 01, 2024 10:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி, பெரும்பாலான மாணவிகளின் விருப்பமான தேர்வாகவும் இன்ஜினியரிங் படிப்புகள் விளங்குகின்றன. பிரகாசமான பணி வாய்ப்புகள், அதிக ஊதியம் மற்றும் சிறந்த பணிச்சூழல், அடுத்தடுத்த பணி உயர்வு வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், இன்ஜினியரிங் நோக்கி பயணிக்க மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கின்றன.
இந்தியாவில், மாணவிகள் மத்தியில் பிரபலமான சில இன்ஜினியரிங் படிப்புகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து இங்கே காணலாம்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், டேட்டா சயின்ஸ் மற்றும் மிஷின் லேர்னிங் ஆகியவை புரட்சியை ஏற்படுத்தும் அளவிற்கு இன்றைய மாணவிகளின் பிரதான தேர்வாக உள்ளது. இந்தத் துறைகளில் நிபுணர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதும் இதற்கு முக்கிய காரணம். தொழில்நுட்பத்தால் இயங்கும் இன்றைய உலகில் டிஜிட்டல் தகவல்களைப் பாதுகாப்பது மிக முக்கியமானதாக உள்ளதால் சைபர் செக்யூரிட்டி படிப்பும் மிக பிரபலமான ஒன்றாக உள்ளது.
பயோமெடிக்கல் இன்ஜினியரிங்
மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பான இத்துறை, மருத்துவ தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மருத்துவ உபகரணங்களை வடிவமைத்தல், மருத்துவப் பயன்பாடுகளுக்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், சிறந்த நோயறிதலுக்கான இமேஜிங் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் போன்றவை இத்துறையில் அடங்கும்.
ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங்
ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உற்பத்தி, ஹெல்த்கேர் மற்றும் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆட்டோமேஷன் மூலம் உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்துதல், அறுவை சிகிச்சை உதவி மற்றும் மறுவாழ்வுக்காக ரோபோக்களை உருவாக்குதல், ரோபாட்டிக்ஸ் உடன் ஏ.ஐ., ஒருங்கிணைப்பதன் வாயிலாக ஸ்மார்ட்டர் சிஸ்டம்ஸ்களை உருவாக்குதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
என்விரான்மெண்டல் இன்ஜினியரிங்
நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் இத்துறை, காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு போன்ற உலகளாவிய சவால்கள் குறித்து விளக்குகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குதல், பாதுகாப்பான மற்றும் நிலையான நீர் விநியோகத்தை உறுதி செய்தல், காற்று மாசுபாட்டை குறைத்தல் மற்றும் காற்றின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்கிறது.
ரீனிவபில் எனர்ஜி இன்ஜினியரிங்
நிலையான எரிசக்தி ஆதாரங்களில் கவனம் செலுத்துதல், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் அதே வேளையில் ஆற்றல் தேவைகளை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. மின்சாரம் மற்றும் வெப்பமாக்கலுக்கு சூரிய சக்தியைப் பயன்படுத்துதல், காற்றாலை விசையாழிகள் மற்றும் அமைப்புகளை உருவாக்குதல், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் சேமிப்பில் காணப்படும் சவால்களுக்கு மேம்பட்ட தீர்வுகளை இத்துறை படிப்பு அளிக்கிறது.
பயோடெக்னாலஜி இன்ஜினியரிங்
மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் காணப்படும் விரைவான முன்னேற்றங்களால், சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்குதல், பயிர் விளைச்சல் மற்றும் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து இத்துறை படிப்பு ஆராய்கிறது. பயோடெக் இன்ஜினியர், ஜெனிடிக் இன்ஜினியர், பார்மசூட்டிக்கல் டெவெலப்பர், ஆராய்ச்சி விஞ்ஞானி போன்ற பணிவாய்ப்புகளை பெறலாம்.
கெமிக்கல் இன்ஜினியரிங்
மருந்துகள் தயாரிப்பு, எனர்ஜி போன்றவற்றில் இன்றியமையாததாக விளங்கும் கெமிக்கல் இன்ஜினியரிங், நிலையான மற்றும் திறமையான செயல்முறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ரசாயன செயல்முறைகளை மேம்படுத்துதல், தனித்துவமான பண்புகளுடன் புதிய பொருட்களை உருவாக்குதல், உயிரியல் செயல்முறைகளுடன் வேதியியல் பொறியியலை இணைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
விண்வெளி ஆய்வு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதுமை, ஏரோடைனமிக்ஸ் எனும் விமானம் மற்றும் விண்கல வடிவமைப்பை மேம்படுத்துதல், மேம்பட்ட உந்துவிசை தொழில்நுட்பங்களை உருவாக்குதல், விண்கலம் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குதல் மற்றும் சோதனை செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. ஏரோஸ்பேஸ் இன்ஜினியர், ஏவியானிக்ஸ் இன்ஜினியர், பிளைட் சிஸ்டம்ஸ் இன்ஜினியர், ஸ்பேஸ்கிராப்ட் டிசைனர் உள்ளிட்ட பல வேலை வாய்ப்புகளை பெறலாம்.
மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் படிப்புகளில் சில மாணவிகளே விரும்பி சேரும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது என்றபோதிலும், தொழில்நுட்ப வளர்ச்சியால் இத்துறைகளிலும் பெண்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.






      Dinamalar
      Follow us