இன்ஜி., வழிகாட்டி: திறமையான மாணவர்களை உருவாக்கும் ஜெ.சி.டி., கல்வி நிறுவனங்கள்
இன்ஜி., வழிகாட்டி: திறமையான மாணவர்களை உருவாக்கும் ஜெ.சி.டி., கல்வி நிறுவனங்கள்
UPDATED : ஜூலை 20, 2026 03:56 PM
ADDED : ஜூலை 20, 2026 03:58 PM
ஸ்ரீ ஜெகன்நாத் கல்வி, சுகாதாரம் மற்றும் தொண்டு அறக்கட்டளையின் கீழ் ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், பாலிடெக்னிக் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட பொறியியல் கல்லுாரி, 11 இளநிலை மற்றும் மூன்று முதுநிலை படிப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. ஜெ.சி.டி., பாலிடெக்னிக் கல்லுாரியில் அக்ரிகல்ச்சர், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட துறைகளில் டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன.
ஜெ.சி.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.பி.ஏ., லாஜிஸ்டிக்ஸ், பி.காம்., லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் மேனேஜ் மெண்ட், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.எஸ்.சி., செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங், பி.சி.ஏ., பி.எஸ்.சி., (டி.சி.எப்.எஸ்.,), பி.கார்ம்., (சி.ஏ.,) உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு தனித்தனி விடுதிகள், கண்காணிப்பு கேமராக்கள், சுகாதாரமான உணவு வசதி, கல்லுாரி பேருந்து சேவை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நவீன நுாலகம், அதிநவீன ஆய்வகங்கள், எல்.சி.டி., வசதியுடன் கூடிய வகுப்பறைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துகின்றன. தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பல்கலை அளவிலான தேர்வுகளில் ஆண்டுதோறும் மாணவர்கள் தங்கப் பதக்கங்கள் மற்றும் உயரிய தரவரிசைகளைப் பெற்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வளாக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதால், மாணவர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
இந்நிறுவனங்களின் மற்றொரு சிறப்பம்சமாக 'சுரபி பண்ணை' விளங்குகிறது. உணவுத் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து செயல்படும் இந்தப் பண்ணையில் மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி, சுயதொழில் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
சுரபி பண்ணையை தொடர்பு கொள்ள 98847 16852 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்களை உலகத் தரத்திற்கு தயார்படுத்தும் கல்வி மையமாக ஜெ.சி.டி., கல்வி நிறுவனங்கள் திகழ்கின்றன.
