தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் சீட் உயர்வு

கோவை அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் சீட் உயர்வு

கோவை அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் சீட் உயர்வு


UPDATED : ஜூன் 17, 2026 08:15 PM

ADDED : ஜூன் 17, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 08:15 PM ADDED : ஜூன் 17, 2026 08:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி:
அண்ணா பல்கலையின் கோவை மண்டல வளாகத்தில் இ.இ.இ., மெக்கானிக்கல், இ.சி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், வி.எல்.எஸ்.ஐ., டிசைன், ஏ.ஐ., மற்றும் டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட ஆறு இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தலா 60 இடங்கள் வீதம் மொத்தம் 360 இடங்கள் இருந்தன. மாணவர்கள் வரவேற்பை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் கூடுதல் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் ஏற்கனவே 60 இடங்கள் இருந்தன. புதிய பிரிவு மூலம் கூடுதலாக 60 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொத்த இடங்களின் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது.

அண்ணா பல்கலை கோவை மண்டல வளாக டீன் சரவணகுமார் கூறுகையில், “வேலைவாய்ப்பு அதிகம் என்பதால், இப்பாடப்பிரிவுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது. கல்லுாரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இதனடிப்படையில், கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பல மாணவர்களின் பொறியியல் கனவு நனவாகும்,” என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us