UPDATED : செப் 23, 2024 12:00 AM
ADDED : செப் 23, 2024 04:04 PM
பெங்களூரு:
நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே, மேலும் 373 அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கில வகுப்புகள் துவக்க கர்நாடக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:
மாநில அரசு 2024 - 25ம் ஆண்டில், 2,000 தொடக்க பள்ளிகளில் ஆங்கில பள்ளிகள் துவங்குவதாக, பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. முதற் கட்டமாக 1,419 அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டது. மற்ற பள்ளிகளிலும், ஆங்கில வகுப்புகள் துவக்கும்படி, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே, மேலும் 373 அரசு துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் துவக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த வகுப்புகளுக்கு, கவுரவ பேராசிரியர்கள் பயன்படுத்தப்படுவர். பெங்களூரில் 126, தார்வாடில் 165, மைசூரில் 82 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.