UPDATED : மார் 17, 2026 02:56 PM
ADDED : மார் 17, 2026 02:59 PM
பொள்ளாச்சி:
பத்தாம் வகுப்பு ஆங்கில பாட பொதுத்தேர்வு நேற்று நடந்தது. தேர்வு குறித்து பொள்ளாச்சி கல்வி மாவட்ட மாணவர்களின் கருத்து:
அஸ்விகா, செண்பகம் மெட்ரிக் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி:
ஆங்கில வினாத்தாள் மிக எளிதாக இருந்தது; அனைத்து வகையான வினாக்களும் எவ்வித பதட்டமும் இல்லாமல் எழுதும்படி இருந்தது. நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன்.
ஸ்ரீதர், கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, பொள்ளாச்சி:
ஆங்கில பொது தேர்வு மிக எளிமையாக இருந்தது. பள்ளியில் கொடுத்த திருப்புதல், பொதுத்தோர்வுக்கு மிகவும் கைகொடுத்தது. நிச்சயமாக இந்த தேர்வில் முழு மதிப்பெண் கிடைக்கும்.
துவாரகேஷ், பாரஸ்ட் ஹில் அகாடமி மெட்ரிக் பள்ளி, காளியாபுரம்:
அனைத்து பகுதிகளிலும் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக பதில் அளிக்கும் வகையிலேயே இருந்தன. எதிர்பார்த்ததை விட ஆங்கில தேர்வு மிக எளிமையாக இருந்தது. முழு மதிப்பெண் கிடைக்கும்.
விஷ்ணுதரன், ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளி, மகாலிங்கபுரம்:
ஆங்கில தேர்வில், ஒன்று, இரண்டு மதிப்பெண் வினாக்கள் எல்லாம் நினைத்ததை விட எளிதாக இருந்தது. ஏற்கனவே பயிற்சி பெற்ற தெரிந்த வினாக்களே வந்ததால், முழு மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
