கல்வி பயணத்தில் மாற்றத்தை உருவாக்கும் ஈங்கூர் தி யூனிக் அகாடமி பள்ளி
கல்வி பயணத்தில் மாற்றத்தை உருவாக்கும் ஈங்கூர் தி யூனிக் அகாடமி பள்ளி
UPDATED : ஏப் 30, 2026 05:09 PM
ADDED : ஏப் 30, 2026 05:11 PM
பெருந்துறை:
ஈரோடு மாவட்டத்தில் நிரந்தர அங்கீகாரம் பெற்ற ஒரே ஐ.சி.எஸ்.இ., மற்றும் ஐஎஸ்சி., பள்ளி, 27 ஆண்டுகள் கல்வி பயணத்தில் மாற்றத்தை உருவாக்கும் பள்ளியாக, பெருந்துறை அடுத்த ஈங்கூர் தி யூனிக் அகாடமி பள்ளி உள்ளது.
'எக்ஸ்ப்ளோரிங் இந்தியா' என்ற கல்வி திட்டத்தின் கீழ், மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் முக்கியமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு மாணவர்கள், கோவை, சூலுாரில் உள்ள விமானப் படை தளத்தையும் மற்றும் கொச்சியில் உள்ள கடற்படை தளத்தையும் பார்வையிட்டு, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து நேரடி அறிவை பெற்றனர்.
மேலும், லடாக் பகுதிகளை சுற்றி பார்த்து, அங்குள்ள இயற்கை அழகு, புவியியல் தனி சிறப்பு மற்றும் பண்பாட்டு மரபுகளை அனுபவித்தனர். உயர் பதவி வகிக்கும் ராணுவ படை அதிகாரிகள், கல்வி ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் தலைமை விருந்தினர்களாக அழைத்து, மாணவர்களுடன் தொடர்பு கொள்ள செய்கிறோம்.
தி யூனிக் அகாடமியில், ஒவ்வொரு நாளும் கற்றல், வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் பயணம் அதன் பெயரை போலவே தனித்துவமானது.
