UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 08:51 AM
உடுமலை:
உடுமலை தமிழிசை சங்கத்தின் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடந்தது.
உடுமலை தமிழிசை சங்கத்தின் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தது. நிகழ்ச்சியில் உடுமலை தமிழிசை சங்க துணைத் தலைவர் மணி தலைமை வகித்தார்.
தமிழிசை சங்க இணை செயலாளர்கள், சுபாஷ் ரேணுகாதேவி கல்வி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளில் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ், வரும் 11ம் தேதி வழங்குவதற்கு அறிவிக்கப்பட்டது. தமிழிசை சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில், மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடந்தது.