UPDATED : அக் 09, 2024 12:00 AM
ADDED : அக் 09, 2024 08:57 AM
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி கற்க உரிமை உண்டு. குறைந்தபட்சம் ஆரம்பம் மற்றும் அடிப்படை கட்டங்களில் ஆரம்பக் கல்வி இலவசமாக அளிக்கப்பட்டது.
ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. தொழிற்கல்வி பொதுவாக அனைவரும் கற்கும் வகையில் இருக்கும்படி செய்யப்பட்டது. அனைவருக்கும் கல்வி என்ற இயக்கம், உலகளாவிய கடமை உணர்வுடன், அனைத்து குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆகியோர்களுக்கு தரமுள்ள அடிப்படைக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக செயல்படுகிறது. 1990ம் ஆண்டில் நடந்த அனைவருக்கும் கல்வி என்பது குறித்த உலக மாநாட்டின்போது இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
கிராம மக்களிடையே, கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி அறியச் செய்யும் வகையில் பிரசாரம் செய்வது, முக்கியத் தேவையாக உள்ளது. கீழ் காணும் விஷயங்கள், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவும்.
பெண் குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பது; குழந்தை தொழிலாளர்களுக்குக் கல்வி மற்றும் இணைப்புக் கல்வித் திட்டங்கள் செயல்பாடு; தனித்திறன் படைத்த, உடல் ரீதியாக சவாலைச் சந்திக்கும் குழந்தைகள், சிறப்புக் குழந்தைகள் ஆகியோர்களுக்குக் கல்வியறிவு அளிப்பது,
பெண்களுக்கு கல்வி அளிப்பது போன்றவை அவசியமானவை.