புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு தேர்வு
புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு தேர்வு
UPDATED : நவ 12, 2024 12:00 AM
ADDED : நவ 12, 2024 09:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட, 63 தொடக்கப்பள்ளிகளில், நேற்று புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படிப்போருக்கு, எழுத்தறிவு தேர்வு நடந்தது.
இதில், 192 ஆண்கள், 655 பெண்கள் என, மொத்தம், 847 பேர் தேர்வு எழுதினர். எலச்சிபாளையம் தொடக்கப்பள்ளியில் உள்ள பள்ளக்காடு மையத்தை வட்டார கல்வி அலுவலர் ராஜவேல், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர்.