UPDATED : பிப் 17, 2025 12:00 AM
ADDED : பிப் 17, 2025 08:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்:
காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் போலீஸ் சார்பில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் கவிதா தலைமை தாங்கினார். காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் கலந்து கொண்டு, போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
இதில், போக்சோ சட்டம் மற்றும் பெண் குழந்தைகள், மகளிர்களுக்கான பாதுகாப்பு சட்டப்பிரிவுகள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் பாலசங்கர், உட்பட பலர் பங்கேற்றனர்.