தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை செய்வதறியாமல் தேர்வர்கள் காத்திருப்பு
தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை செய்வதறியாமல் தேர்வர்கள் காத்திருப்பு
UPDATED : பிப் 16, 2026 12:39 PM
ADDED : பிப் 16, 2026 12:41 PM
அ நிறம் | அளவு
கோவை:
மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 2 தேர்வு நடத்தி எட்டு ஆண்டுகளாகியும் அதற்கான முடிவுகள் வெளியாகவில்லை.
தமிழகத்தில், 99 வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், 38 பறக்கும்படை பிரிவு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில், 496 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டும்.
ஆனால் 200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்பும் வகையில், தமிழகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 2க்கான போட்டித்தேர்வு கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆனால் 8 ஆண்டுகள் கடந்தும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. தேர்வு எழுதியோர் காத்திருக்கின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் போதிய மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இல்லாததால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
