UPDATED : ஜூலை 30, 2025 12:00 AM
ADDED : ஜூலை 30, 2025 08:55 AM

சென்னை:
025-26 கல்வியாண்டுக்கான பள்ளி மாணவர்களின் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
புதிய அட்டவணையின்படி, 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி முதல் முதல் காலாண்டுத் தேர்வுகள் துவங்கி, செப்டம்பர் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரையாண்டுத் தேர்வுகள், டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதியுடன் முடிவடையும். டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறையாக உள்ளது.
மேலும், 2025-26 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்கள் தேர்வுகளுக்கான தயாரிப்பை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.