திறன், கல்வியில் தனித்துவ பயணம் நவபாரத் கல்வி நிறுவனங்கள்
திறன், கல்வியில் தனித்துவ பயணம் நவபாரத் கல்வி நிறுவனங்கள்
UPDATED : அக் 14, 2026 05:32 PM
ADDED : அக் 14, 2026 05:33 PM
கல்வி என்பது பாடப்புத்தக அறிவைப் பெறுவதோடு நின்றுவிடாமல், ஒப்வொரு மாணவரின் தனித்திறமையையும் வெளிக்கொணர்ந்து, அவர்களைச் சிறந்த எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்துடன் செயல்படுகிறது நவபாரத் கல்வி நிறுவனங்கள்.
நவபாரத் கல்வி நிறுவனங்களின் கீழ், அன்னூரில் நவபாரத் நேஷனல் பள்ளி, நவபாரத் இன்டர்நேஷனல் பள்ளி, பல்லடத்தில் நவபாரத் ராயல் பள்ளி, சத்தியமங்கலத்தில் நவபாரத் மாடர்ன் பள்ளி என நான்கு பள்ளிகள் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன.
மாணவர்களின் எதிர்கால இலக்குகளை அடைய வலுவான அடித்தளத்தை உருவாக்க சிறப்புக் கவனம் செலுத்துகிறது. ஜே.இ.இ, நீட், கிளாட், சி.ஏ, சி.எம்.ஏ, யூசீட், நிப்ட், க்யூட் உள்ளிட்ட உயர்கல்வி, தொழில்முறை நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கல்வியுடன், மாணவர்களின் கலை, விளையாட்டு, படைப்பாற்றல் திறன்களுக்கும் சமமான முக்கியத்துவம் தரப்படுகிறது. கோ கோ, சதுரங்கம், நீச்சல், நடனம், யோகா, சிலம்பம், மல்லர் கம்பம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் உடல் திறன், மன உறுதி, ஒழுக்கம், குழுவாகச் செயல்படும் பண்பு மற்றும் தன்னம்பிக்கை மேம்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாணவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் திறமையை அடையாளம் கண்டு, அதனைச் சரியான வழியில் வளர்த்து, தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் ஆற்றலை உருவாக்குவதே நவபாரத் கல்வி நிறுவனங்களின் கல்விப் பயணத்தின் அடிப்படை நோக்கமாகும்.
