தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்று திறனாளிகளுக்கு துறை தேர்வில் விலக்கு

மாற்று திறனாளிகளுக்கு துறை தேர்வில் விலக்கு

மாற்று திறனாளிகளுக்கு துறை தேர்வில் விலக்கு


UPDATED : ஆக 23, 2024 12:00 AM

ADDED : ஆக 23, 2024 09:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2024 12:00 AM ADDED : ஆக 23, 2024 09:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறை தேர்வுகளை, மூன்று முறை எழுதி தேர்ச்சி பெறாத, 50 வயதான மாற்றுத்திறனாளிகளுக்கு, மீண்டும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் பலர், 40வது வயதில் தான் பணியில் சேர்கின்றனர். அவர்களின் பதவி உயர்வுக்காக, அந்தந்த துறைகளால் நடத்தப்படும் துறை தேர்வுகளில், பெரும்பாலான பார்வைத்திறன், கேட்கும் திறன் குறைந்த, கற்றல் குறைபாடு, அறிவுசார் குறைபாடு, புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகளால் தேர்ச்சி பெற முடிவதில்லை.

அவர்களில் தகுதியானோரை பணி வரன்முறை செய்து, பதவி உயர்வு வழங்கும் வகையிலும், அரசுப் பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீட்டின்படியும், நான்காவது முறையாக தேர்வெழுதுவதில் இருந்து விலக்களித்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலர் சிஜி தாமஸ் வைத்தியன் உத்தரவிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us