தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களின் தனித்திறமைகள் படைப்புகள் குறித்த கண்காட்சி

மாணவர்களின் தனித்திறமைகள் படைப்புகள் குறித்த கண்காட்சி

மாணவர்களின் தனித்திறமைகள் படைப்புகள் குறித்த கண்காட்சி


UPDATED : ஜன 30, 2026 02:19 PM

ADDED : ஜன 30, 2026 02:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2026 02:19 PM ADDED : ஜன 30, 2026 02:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சாம்பக்குளம் கவினா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களின் தனித் திறமைகள் படைப்புகள் குறித்த 4ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். தாளாளர் ஹேமலதா முன்னிலை வகித்தார். பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவண பெருமாள் அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார்.

அப்போது 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் எதிர்கால லட்சியங்களை வெளிப்படுத்தும் விதமாக டாக்டராக, கலைத்துறை ஆராய்ச்சியாளராக, அறிவியல் கண்டு பிடிப்பாளராக, தமிழ் அறிஞர்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு, மலைகளின் சேகரிப்பு செயற்கைக்கோள் ஸ்மார்ட் சிட்டி, பிளாஸ்டிக் ஒழிப்பு என பல்வேறு விதமாக படைப்புகள் அமைத்து இருந்தனர்.

ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை பெற்றுக் கொடுத்த முப்படை வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சீருடை அணிந்து வந்தனர். பெற்றோர், ஆசிரியர்கள் பார்வையிட்டனர். சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் சார்பில் கம்பு, சோளம், குதிரைவாலி உள்ளிட்ட இயற்கை தானியங்கள் மூலம் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டு அதன் பயன்கள் குறித்து விளக்கினர். பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us