தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளி மாணவர்களுக்கும் திறன் பிளஸ் திட்டம் எதிர்பார்ப்பு

தனியார் பள்ளி மாணவர்களுக்கும் திறன் பிளஸ் திட்டம் எதிர்பார்ப்பு

தனியார் பள்ளி மாணவர்களுக்கும் திறன் பிளஸ் திட்டம் எதிர்பார்ப்பு


UPDATED : அக் 23, 2026 01:54 PM

ADDED : அக் 23, 2026 01:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 01:54 PM ADDED : அக் 23, 2026 01:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் மொழிப் பாடத்திறன், கணிதத் திறனில் கற்றல் குறைபாடுள்ள அரசு பள்ளி மாணவர்களை கண்டறிந்து திறன் பிளஸ் இயக்கத்தின் மூலம் சிறப்பு பயற்சிகள் அளிப்பதை தனியார் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தி அறிவிக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் மொழிப் பாடத்திறன், கணிதத் திறனில் கற்றல் குறைபாடுள்ள அரசு பள்ளி மாணவர்களை கண்டறிந்து திறன் பிளஸ் இயக்கத்தின் மூலம் சிறப்பு பயிற்சிகள் அளிப்பதற்காக அடிப்படை மதிப்பீடு நடத்தப்பட உள்ளது.

2 முதல் 5ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும், 6 முதல் 9ம் வகுப்பில் குறைந்தது ஒரு வகுப்பிற்கு 40 சதவீத மாணவர்கள் இந்த மதிப்பீட்டில் பங்கேற்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறை வழங்கியுள்ளது.

தமிழ், ஆங்கிலத்தில் எழுத்துக்கள், சொற்களை கண்டறிதல், இரண்டெழுத்து, மூன்றெழுத்து சொற்களை வாசித்தல், எழுதுதல், எண்களை எழுதுதல், வாய்ப்பாடுகள், இரண்டு இலக்கக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைகற்றலில் இடர்பாடுடையவர்கள் இந்த மதிப்பீட்டில் கண்டறியப்பட உள்ளனர்.

இந்த அடிப்படை மதிப்பீடு ஒரு நாளுக்கு முன்னதாகவே அந்தந்த அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும். 10 வினாக்களை கொண்டிருக்கும் இந்த தேர்வு 40 நிமிடமே நடக்கும். பின் இந்த தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கு மதிப்பீடு செய்து எமீஸ்சில் பதிவேற்றப்பட உள்ளது.

இந்த திறன் பிளஸ் திட்டத்தை தனியார் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தனியார் பள்ளிகளில் ஏற்கனவே கற்றல் குறைவான மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் நிலையில், அரசும் அவர்களது முன்னேற்றத்தை கண்காணித்து அவர்கள் மீது கவனம் செலுத்தினால் தேர்ச்சி சதவீதம் இன்னும் மேம்படும். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us