தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு


UPDATED : நவ 18, 2025 07:57 AM

ADDED : நவ 18, 2025 07:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2025 07:57 AM ADDED : நவ 18, 2025 07:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லுா-ரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, வரும், 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், 2025- 2026ம் கல்வியாண்டில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும், 28ம் தேதி வரை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் காலநீட்டிப்பு செய்துள்ளது. இக்கல்லுாரியில், முதலாமாண்டில், அமைப்பியல் துறையில், 17 இடங்கள், இயந்திரவியல் துறையில், 16, மின்னியல் (ம) மிண்ணணுவியல் துறையில், 24, மிண்ணணுவியல் (ம) தொடர்பியல் துறையில், 39, இயந்திரவியல் (கருவி மற்றும் அச்சு) துறையில், 15, என, மொத்தம், 111 காலியிடங்கள் உள்ளன.எனவே, டிப்ளமோ வகுப்பில் சேர தகுதியுள்ள, 10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 1 இடைநின்றவர், பிளஸ் 2 தோல்விய-டைந்தோர் ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் இக்கல்லுாரியில் நேரடியாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விருப்பமான துறைக்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us