UPDATED : டிச 17, 2024 12:00 AM
ADDED : டிச 17, 2024 05:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற கால அவகாசம் டிச.,20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 10, 11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடந்த 6ம் தேதி முதல் இன்று (டிச.,17) வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர் கனமழை காரணமாக தேர்வர்களின் நலன் கருதி டிச., 20 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.