தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லுாரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

அரசு கல்லுாரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

அரசு கல்லுாரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்


UPDATED : செப் 06, 2026 03:19 PM

ADDED : செப் 06, 2026 03:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2026 03:19 PM ADDED : செப் 06, 2026 03:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழகம் முழுவதும் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கை நடந்த நிலையில், ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப வகையில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் வரும் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு கலைக் கல்லுாரியில் இளநிலையில் உள்ள 1996ல், 1889 இடங்கள் நிரம்பின; 107 இடங்கள் காலியாகவுள்ளன. முதுநிலையில் 667 இடங்களில் 588 இடங்கள் நிரம்பின. 79 இடங்கள் காலியாகவுள்ளன.

புலியகுளம் அரசு மகளிர் கல்லுாரியில் 144 இடங்கள் காலியாக உள்ளன. தொண்டாமுத்துார் அரசு கல்லுாரியில் 70க்கும் மேற்பட்ட இடங்கள், மேட்டுப்பாளையம் அரசு கல்லுாரியில் 200க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

இது வரை விண்ணப்பிக்காதவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, சேர்க்கை பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us