தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போலி புத்தகம் விவகாரம்; நுாலக அதிகாரிகளுக்கு சம்மன்

போலி புத்தகம் விவகாரம்; நுாலக அதிகாரிகளுக்கு சம்மன்

போலி புத்தகம் விவகாரம்; நுாலக அதிகாரிகளுக்கு சம்மன்


UPDATED : நவ 18, 2026 07:33 PM

ADDED : நவ 18, 2026 07:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 07:33 PM ADDED : நவ 18, 2026 07:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'கோவை ஈ.வெ.ரா., நுாலகம் உள்ளிட்ட அரசு நுாலகங்களுக்கு, போலி புத்தகங்கள் கொள்முதல் செய்தது தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, நுாலக அதிகாரிகளுக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

கடந்த, தி.மு.க., ஆட்சியில், கோவை ஈ.வெ.ரா., நுாலகம் உள்ளிட்ட நுாலகங்களுக்கு, பல கோடி ரூபாயில், போலி நுால்கள் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக, ஏற்கனவே 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின், பொறுப்பு தலைமை நுாலகர் காமாட்சி, மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தின் பொறுப்பு தலைமை நுாலகர் தினேஷ்குமார் ஆகியோர், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

அதே போல், கோவை ஈ.வெ.ரா., நுாலகத்தின் பொறுப்பு அலுவலர் சந்தானகிருஷ்ணன், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின் நுாலகர் சந்தான கார்த்திகேயன், பொது நுாலக இயக்குநரகத்தின் தலைமை கணக்கு அலுவலர் ஜூலியட் ஆகியோரும், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பி இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us