UPDATED : மே 07, 2024 12:00 AM
ADDED : மே 07, 2024 09:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த சத்திரம் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா, 37. இவர், பொன்னை பகுதியில் எம்.பி.பி.எஸ்., மருத்துவர் என போர்டு வைத்து கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக வாலாஜா அரசு மருத்துவமனை டாக்டர் நர்மதாவிற்கு புகார் வந்தது.
நேற்று அவர் அப்பகுதியில் சோதனை நடத்திய போது, திவ்யா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், பிளஸ் 2 மட்டும் படித்துவிட்டு கிளினிக் அமைத்து, நோயாளிகளுக்கு நீண்ட நாட்களாக சிகிச்சை அளித்தது தெரிந்தது. நர்மதா புகாரின்படி, ராணிப்பேட்டை சிப்காட் போலீசார், திவ்யாவை கைது செய்து, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.