UPDATED : ஜூலை 24, 2026 08:15 PM
ADDED : ஜூலை 24, 2026 08:16 PM
திருக்கோவிலுார்:
திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் சார்பில், கிராமப்புற பள்ளிகளுக்கு மின்விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் ஆப் டெம்பிள் சிட்டி சார்பில், திருக்கோவிலுார் வட்டார கல்வி அலுவலகத்தில் கிராமப்புற பள்ளிகளுக்கு மாணவர்களின் வசதிக்காக மின்விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி கிளப் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடந்தது.
முன்னாள் தலைவர்கள் கோதம் சாந்த், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் கார்த்திக்ராம், பொருளாளர் முத்துக்குமாரசாமி, வட்டார கல்வி அலுவலர் வேணுகோபால், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் ஏற்பாட்டில் கிராமப் பகுதி மாணவர்களின் நலன் கருதி சுற்று வட்டார துவக்க பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக 12 மின்விசிறிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர் கீர்த்தி வர்மன், வேம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
