மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இறுதி மதிப்பீட்டு தேர்வு
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இறுதி மதிப்பீட்டு தேர்வு
UPDATED : ஏப் 08, 2025 12:00 AM
ADDED : ஏப் 08, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகாளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், நேற்று ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இறுதி மதிப்பீட்டு தேர்வு நடந்தது. தலைமை ஆசிரியர்
சந்திரசேகர் தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர் நடராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு பயிற்றுநர் செல்வகுமார் மூலம் தேர்வு நடத்தப்பட்டு இணையதள செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இத்தேர்வில் மாணவர்களின் அடைவு நிலை அறிந்து அதற்கு ஏற்றார்போல், அடுத்த ஆண்டில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான எளிமைப்படுத்தப்பட்ட, எண்ணும் எழுத்தும் பயிற்சி நுால் வழங்கப்பட உள்ளது.

