UPDATED : அக் 08, 2026 05:47 PM
ADDED : அக் 08, 2026 05:48 PM
பெ.நா.பாளையம்:
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனுார் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் உள்ள தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதி ஆண்டு மாணவியர், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்களுடன் இணைந்து, 3 மாத களப்பயிற்சியை நேற்று தொடங்கினர்.
விவசாயிகளை சந்தித்து பயிர் சாகுபடி முறை, விதைத்தேர்வு, நாற்றாங்கால் பராமரிப்பு, உரம் மற்றும் பூச்சி மேலாண்மை, நீர் மேலாண்மை, அறுவடை மற்றும் சந்தைப்படுத்தல் முறை குறித்து, நடைமுறை அறிவை பெற்று பயிற்சி மேற்கொண்டனர்.
தொடர்ந்து விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை கேட்டறிந்து, அதற்குரிய தொழில்நுட்ப தீர்வுகளை புரிந்து கொள்வதோடு, வேளாண் மற்றும் தோட்டக் கலைத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களை கேட்டு பயன் அடைந்தனர்.
