தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பாரதியார் பல்கலை., வளாகத்தில் தீ விபத்து

பாரதியார் பல்கலை., வளாகத்தில் தீ விபத்து

பாரதியார் பல்கலை., வளாகத்தில் தீ விபத்து


UPDATED : பிப் 25, 2025 12:00 AM

ADDED : பிப் 25, 2025 09:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2025 12:00 AM ADDED : பிப் 25, 2025 09:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி:
பாரதியார் பல்கலை., வளாகத்தில் உள்ள தைலக்காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு இருந்த புற்கள் எரிந்து சாம்பலானது.

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பாரதியார் பல்கலை., அண்ணா பல்கலை., அமைந்துள்ளது. நேற்று மாலை, அண்ணா பல்கலை., வளாகத்திற்குட்பட்ட எல்லையில் உள்ள காய்ந்த புற்களில், திடீரென தீப்பிடித்தது.

சிறிது நேரத்திலேயே தீ மளமளவென பரவி, பாரதியார் பல்கலை., வளாகத்தில் உள்ள தைலக்காட்டில் பரவியது. தைலக்காட்டில் உள்ள காய்ந்த புற்களில் தீ பரவி, கொளுந்து விட்டு எரிந்தது.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் தொண்டாமுத்தூர் தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், சுமார், 1 ஏக்கர் பரப்பளவில் இருந்த புற்கள் எரிந்து சாம்பலானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us