தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தீயணைப்புத்துறை சார்பில் பள்ளியில் விழிப்புணர்வு

தீயணைப்புத்துறை சார்பில் பள்ளியில் விழிப்புணர்வு

தீயணைப்புத்துறை சார்பில் பள்ளியில் விழிப்புணர்வு


UPDATED : அக் 17, 2026 04:31 PM

ADDED : அக் 17, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 04:31 PM ADDED : அக் 17, 2026 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உலக பேரிடர் அபாய குறைப்பு நாளை முன்னிட்டு, தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, அரவக்குறிச்சி தீயணைப்பு துறை சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் சாகுல் அமீது வரவேற்றார். தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன், பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பதை தீயணைப்பு நிலைய பணி அலுவலர்களை வைத்து செய்து காட்டினார்.

தண்ணீரில் இருக்கும்போது லைப் பேக், லைப் ஜாக்கெட் பயன்படுத்தி தப்பிப்பது, வெள்ளத்தின் போது, ஒரு லிட்டருள்ள, 10 வாட்டர் பாட்டில்களை இடுப்பை சுற்றி கட்டிக்கொண்டு தப்பிப்பது, 5 லிட்டர் கேனை மிதவை படகாக பயன்படுத்தி தப்பிப்பது பற்றி செயல் விளக்கம் செய்து காட்டினர்.

மேலும் விபத்தின் போது, கைகளை பயன்படுத்தி ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றும் முறையை, மாணவர்களை கொண்டு விளக்கி காட்டினர். தீயணைப்பு நிலைய அலுவலக எண்-112 என்பதை பயன்படுத்தி, மீட்பு பணிக்கு அழைக்கலாம் என்பதை அறிவுறுத்தினர். அறிவியல் ஆசிரியை ராபியா பசரி நன்றி கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us