பேரிடர் கால ஆபத்தை எதிர்கொள்ள தீயணைப்புத்துறை செயல் விளக்கம்
பேரிடர் கால ஆபத்தை எதிர்கொள்ள தீயணைப்புத்துறை செயல் விளக்கம்
UPDATED : ஜன 10, 2026 08:51 AM
ADDED : ஜன 10, 2026 08:52 AM
கிருஷ்ணகிரி:
தீ விபத்தின் போது மக்கள் எவ்வாறு பாதுகாப்புடன் இருப்பது, பருவமழையின் போது பாதுகாப்புடன் இருப்பது, பேரிடர் காலங்களில் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து, தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
கிருஷ்ணகிரி ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் சுதா ராணி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியின் போது, தீ விபத்து காலங்களில் எவ்வாறு தீயை அணைப்பது, இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், 'டாமினி' என்ற செயலியை பதிவிறக்கம் செய்வது, தீ விபத்து ஏற்படும்போது தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள், 112 என்றும், எண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டரால் ஏற்படும் தீயை அணைப்பது, பல வகை தீயணைப்பான்கள் ஆகியவை குறித்து, தீயணைப்பு நிலைய அலுவலர் அந்தோணிசாமி முன்னிலையில், தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர். தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு 'மஞ்சப்பை' வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

