UPDATED : மார் 28, 2024 12:00 AM
ADDED : மார் 28, 2024 10:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:
மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள இக்கல்லுாரி வளாகத்தில், புதர் அடர்ந்துள்ளது. தற்போதே கடும் வெயில் தகிக்கும் நிலையில், புதர் செடிகள் காய்ந்துள்ளன.
இப்புதரில், பகல் 12:30 மணிக்கு, திடீரென தீப்பற்றி புகைந்தது. சாலையில் வாகனங்களில் சென்றவர்கள், புகையால் மூச்சுத் திணறினர்.
சில ஏக்கர் புதரில் தீப்பற்றி கருகி சாம்பலானது. கல்லுாரி மாணவர்கள் போராடி தீயை அணைத்து கொண்டிருந்த நிலையில், தகவலறிந்து சென்ற மாமல்லபுரம் தீயணைப்பு படையினர், மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.

