UPDATED : ஏப் 14, 2026 09:22 PM
ADDED : ஏப் 14, 2026 09:23 PM
அ நிறம் | அளவு
கான்பெரா:
ஆஸ்திரேலிய ராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, புதிய ராணுவ தளபதியாக லெப்டினெனன்ட் ஜெனரல் சூசன் கோயல் என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1987ல் ராணுவத்தில் சேர்ந்த சூசன், 1992ல் தகவல் தொடர்பு பிரிவின் அதிகாரியாக பொறுப்பேற்றார்கள். 2020ல் மேற்காசிய நாடுகளில் ஆஸ்திரேலிய படைகளுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர்.
40 ஆண்டு ராணுவ அனுபவம் கொண்ட சூசன், தன் ராணுவ பணியில், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்காசிய நாடுகளில் நடந்த ராணுவ நடவடிக்கைகள் உட்பட பல்வேறு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
