அரசின் மஞ்சப்பை திட்டத்தில் கொங்கு கல்லுாரிக்கு முதல் பரிசு
அரசின் மஞ்சப்பை திட்டத்தில் கொங்கு கல்லுாரிக்கு முதல் பரிசு
UPDATED : செப் 04, 2024 12:00 AM
ADDED : செப் 04, 2024 08:07 AM
ஈரோடு:
தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை 2023-24ல் அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்து கல்லுாரி மாணவர்களிடமும், மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தும் கல்லுாரிக்கு, தமிழக அரசு விருது வழங்குகிறது.
தமிழக அளவில் இத்திட்டத்தில் மிக சிறப்பாகச் செயல்பட்ட பெருந்துறை கொங்கு வேளாளர் தொழில் நுட்ப கல்லுாரி அறக்கட்டளையின் கீழ் இயங்கும், ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரிக்கு, 2023--24ம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருது மற்றும் முதல் பரிசான, 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டது.
சென்னையில் நடந்த விழாவில், சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் விருது வழங்கினார். விருது பெற்றதற்கு காரணமாக இருந்த கல்லுாரி முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர் மற்றும் கல்லுாரி தாளாளர் தங்கவேல், அறக்கட்டளை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.