தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா


UPDATED : ஆக 31, 2026 02:51 PM

ADDED : ஆக 31, 2026 02:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 02:51 PM ADDED : ஆக 31, 2026 02:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.

இதில், கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைைமவகித்து பேசுகையில், “உலகளாவிய வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும், சர்வதேச அளவில் சிறந்த நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் மாணவர்கள் தங்களது தொழில்துறை திறன்களை மேம்படுத்த வேண்டும்.

ஏ.ஐ., வருகை, மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தொழில் முனைவோராகவும் புதுமையாளர்களாகவும் உருவாக உதவும்,” என்றார்.

நாஸ்காம் நிறுவனத்தின் இயக்குனரும், மாற்றம் அறக்கட்டளையின் இணை நிறுவனருமான உதயசங்கர், செயற்கை நுண்ணறிவு தற்போது அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் குறித்தும், எதிர்கால வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்களும் முக்கிய பங்கு வகிக்க உள்ளன என்பது குறித்தும் பேசினார்.

விழாவில், கல்லுாரி அறங் காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலர் சரண்குமார், நிறுவன வளர்ச்சி இயக்குனர், சக்திஸ்ரீ, செயல் இயக்குனர், குப்புசாமி, கல்லுாரி முதல்வர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை துறைத் தலைவர் சித்திரகலா செய்திருந்தார்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us