தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா


UPDATED : செப் 21, 2026 05:12 PM

ADDED : செப் 21, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 05:12 PM ADDED : செப் 21, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்:
ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரியில், 2026 - 27ம் கல்வியாண்டிற்கான, முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. ராசிபுரம் முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர் மற்றும் மேனேஜிங் டிரஸ்டி குணசேகரன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், “திறமையான மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும். மாணவர்கள் தொழில் திறமை மிக்க பொறியாளர்களாக உருவாகி நல்ல வேலைவாய்ப்புகளை பெற கல்லுாரி நிர்வாகம் அனைத்து வகையிலும் துணை நிற்கும்,” என்றார்.

சென்னை சக்சஸ்வெர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குனருமான அன்புத்தம்பி பேசுகையில், “பள்ளிப்பருவம் என்பது கட்டுப்பாடுகள் நிறைந்த பருவம்; கல்லுாரி பருவம் என்பது வழிகாட்டுதல்கள் மட்டுமே உள்ள பருவம். கட்டுப்பாடுகள் அற்ற இந்த வழிகாட்டுதல் பருவத்தை சரியாக பயன்படுத்தி திட்டமிட்டு படித்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்,” என்றார்.

அறக்கட்டளை அறங்காவலர் அம்மணி கந்தசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர் உமாராணி குணசேகரன், இணை செயலர் ராகுல் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, மாணவர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை டீன் சுடர்மொழி வரவேற்றார்.

கல்வி செயல்பாடுகள் டீன் வேணுகோபால் வரவேற்றார். முதல்வர் செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். அறிவியல் மற்றும் மானுடவியல் துறை தலைவர் இளவரசன் நன்றி கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us