குழந்தைகளுக்கான புகைப்பட போட்டி மீன்வளத்துறை அறிவிப்பு
குழந்தைகளுக்கான புகைப்பட போட்டி மீன்வளத்துறை அறிவிப்பு
UPDATED : நவ 06, 2025 07:39 AM
ADDED : நவ 06, 2025 07:39 AM
சென்னை:
'மீனவர் கலாசாரம்' தொடர்பான, புகைப்பட போட்டிக்கு, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை அனுப்பலாம்' என, மத்திய மீன் வளத்துறை தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் இடையே, நாட்டின் மீன்வளத்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மீன்வள கலாசாரத்தை ஊக்குவிக்க, புகைப்பட போட்டி நடத்தப்படுகிறது.
போட்டியில், மழலையர் முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும், தங்கள் குழந்தைகளுக்கு, மீனவர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய உடை, அணிகலன், வலை, கூடை மற்றும் தலைக்கவசம் அணிவித்து, புகைப்படம் எடுக்க வேண்டும். அதோடு, தங்கள் அன்றாட பணிகளில், டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்தும் நவீன மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூறுகளை இணைக்க வேண்டும்.
புகைப்படங்களை, https://www.mygov.in/task/dress-your-kid-fisherboy-or-fishergirl/ என்ற இணையதளத்தில், 17ம் தேதிக்குள், பதிவேற்றம் செய்ய வேண்டும். வெற்றியாளர்கள் விபரம், இணையதளத்தில் வெளியிடப்படும்.

