தமிழ் தொண்டு ஆற்றிய தமிழ் ஆசிரியர்களுக்கு மலர் கவுரவம்
தமிழ் தொண்டு ஆற்றிய தமிழ் ஆசிரியர்களுக்கு மலர் கவுரவம்
UPDATED : ஏப் 12, 2025 12:00 AM
ADDED : ஏப் 12, 2025 10:42 AM
கோவை:
தமிழக அரசு விருது பெற்ற தமிழ் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, விழா மலர் உருவாக்கம், தமிழ் ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் நடத்துவது தொடர்பானஆலோசனைக் கூட்டம், தியாகி என்.ஜி.ஆர்., மேல்நிலைப் பள்ளியில்,நேற்று நடந்தது.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருளானந்தம், மாவட்ட தலைவர் சரவணகுமார், ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலை பள்ளி செயலாளர் ஜெகநாதன், கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் செந்துாரன், என்.ஜி.ஆர்., பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவம் ஆகியோர் கருத்துகள் தெரிவித்தனர்.
நிறைவில், கோவை மாவட்டத்தில் தமிழக அரசு விருது பெற்ற மூன்று தமிழ் ஆசிரியர்களுக்கு ஜூன் மூன்றாவது வாரம் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
தமிழ் ஆசிரியர்களுக்கு இலக்கண பயிலரங்கு நடத்தவும், தமிழ் தொண்டு செய்ததாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தமிழ் ஆசிரியர்களின் புகைப்படம், கட்டுரைகள் அடங்கிய விழா மலர் வெளியிட்டு கவுரவிக்கவும்,முடிவு செய்யப்பட்டது.

