UPDATED : அக் 21, 2025 09:49 AM
ADDED : அக் 21, 2025 09:50 AM

கோவை:
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், உலக உணவு தினம் கொண்டாட்டம் நடந்தது.
இதையொட்டி, உணவு பதன்செய் பொறியியல் துறை சார்பில், 'சிறந்த உணவு மற்றும் சிறந்த எதிர்காலத்துக்காக கைகோர்ப்போம்' என்ற கருப்பொருளில், உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது.
எதிர்கால சந்ததியினருக்கு, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, புதுமையான பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், நிலையான உணவு மதிப்புச்சங்கிலியின் அவசியம், விவசாய கண்டுபிடிப்புகளை ஊட்டச்சத்து மேம்பாட்டோடு இணைப்பதன் முக்கியத்துவம், பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பது தொடர்பான ஐ.நா.வின், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில், இளைஞர்களின் முக்கியப்பங்கு குறித்து விளக்கப்பட்டது.
பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன் ரவிராஜ், உணவு பதனிடும் துறை தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.