தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராகுல் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவதா? காங்கிரசுக்கு பா.ஜ., கண்டனம்

ராகுல் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவதா? காங்கிரசுக்கு பா.ஜ., கண்டனம்

ராகுல் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவதா? காங்கிரசுக்கு பா.ஜ., கண்டனம்


UPDATED : அக் 09, 2026 11:29 AM

ADDED : அக் 09, 2026 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 11:29 AM ADDED : அக் 09, 2026 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னையில், ராகுல் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க, கல்லுாரி மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக, காங்கிரஸ் கட்சியினர் மீது, பா.ஜ., தேசிய செயலர் வெங்கடேசன் குற்றம்சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை:

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மாணவர்களுடான சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையில் நடக்கிறது. இதில், சென்னையில் உள்ள கல்லுாரி மாணவர்களை, கட்டாயப்படுத்தி வரச் சொல்வதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.

உணவும், பேருந்து வசதியும் தருவதாக கூறியும், மாணவர்கள் வரத்தயாராக இல்லாததால், கூட்டத்தை திரட்ட, கல்லுாரி நிர்வாகத்தினர் வழியே நிர்பந்தித்து, என்ன நிகழ்ச்சி என்றே கூறாமல், மாணவர்களை அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வர மறுத்தால், 'கல்லுாரி முதல்வரை சந்திக்க வேண்டும்' என மிரட்டுவதாக, மாணவர்கள் தெரிவிக்கும் தகவல், காங்கிரஸின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது.

மாணவர்களிடையே எடுபடாத பொய்யான கருத்துகளை கொண்டு வந்து, அவர்கள் மீது திணிப்பதும், அவர்களை மிரட்டி, வலுக்கட்டாயமாக வர வைப்பதும், அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. கூட்டணி கட்சியான காங்கிரசின் இந்த அக்கிரமத்தை, த.வெ.க., அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.

இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா என, தீர விசாரித்து, மாணவர்களின் நலனை, த.வெ.க., அரசு காக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us