யு.பி.எஸ்.சி., தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார் பதவியேற்பு
யு.பி.எஸ்.சி., தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார் பதவியேற்பு
UPDATED : மே 15, 2025 12:00 AM
ADDED : மே 15, 2025 05:52 PM

புதுடில்லி:
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி) புதிய தலைவராக இன்று பதவியேற்றார்.
ஆணையத்தின் மூத்த உறுப்பினரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் சுக்லா (ஓய்வு) பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார் .ஏப்ரல் 29 அன்று பிரீத்தி சூடானின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து யு.பி.எஸ்.சி., தலைவர் பதவி காலியாக இருந்தது.
யார் இந்த அஜய் குமார்
அஜய் குமார் 1985 ஆம் ஆண்டு கேரள கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார்.2019முதல் 2022 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு செயலாளராக பொறுப்பு வகித்தவர். மேலும் பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பர் பாரத், ஆயுதப்படை நவீனமயமாக்கல், கல்வான் நெருக்கடி நிர்வாகம் போன்ற முக்கிய திட்டங்களில் பங்காற்றினார். மேலும் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் கேரள அரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.35 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவிலும் மத்தியிலும் முக்கியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.