UPDATED : டிச 16, 2024 12:00 AM
ADDED : டிச 16, 2024 11:19 AM
பந்தலுார்:
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே கிராமத்தை சேர்ந்தவர் டேனிபவுல், 43; இவர், கூடலுார் அரசு கலை கல்லுாரியில் சில ஆண்டுகளுக்கு முன் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். தற்போது, முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம், இவரின் வீட்டிற்கு அருகே வசித்து வரும், 15 வயது மாணவி மற்றும் அவரது தோழி ஆகியோர் பள்ளிக்கு சென்று திரும்பிய போது, பஸ்சுக்கு காத்திருந்துள்ளனர். அப்போது, காரில் வந்த டேனிபவுல் மாணவியரிடம், காரில் வந்தால் வீட்டில் விடுகிறேன் என தெரிவித்து, அவர்களை ஏற்றி சென்றுள்ளார்.
ஒரு மாணவியை வீட்டில் இறக்கி விட்டு, மற்றொரு மனைவியை காரில் வைத்து, நடுவழியில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது, மாணவி சப்தம் போட்டு, கார் கதவை திறந்து இறங்க முற்பட்டுள்ளார். அவ்வழியே வந்த ஆட்டோ டிரைவர், மாணவியை மீட்டு, அவரது வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்.
தேவாலா அனைத்து மகளிர் போலீசார், டேனிபவுலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.