அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள், உடைகள்
அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள், உடைகள்
UPDATED : ஆக 17, 2026 03:25 PM
ADDED : ஆக 17, 2026 03:29 PM
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 80வது சுதந்திர தின விழா மற்றும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தலைமையாசிரியர் பிரசாத் தலைமை வகித்தார். கிராமப்புற மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் இடைநிற்றலை குறைத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உயர்கல்விக்கு சென்று வரும் வகையிலும், இப்பள்ளியில், 8ம் வகுப்பு முடித்த, 10 ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு, 'ரைட் டு லிவ்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், 60,000 ரூபாய் மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
அதே போல், மாணவ, மாணவியரின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தரமான விளையாட்டு உடைகள் வழங்கப்பட்டன.
அவற்றை, 'ஸ்டார்லிங்க்' என்ற நிறுவன முதன்மை தலைவர் மஞ்சுநாத் வழங்கினார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவூட்டும் வகையில், மாணவ, மாணவியரின் குழு நடனம், தேச பக்தி பாடங்கள், கவிதை வாசிப்பு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மனித வாழ்க்கைக்கு தேவையானது 'அதிர்ஷ்டமா அல்லது முயற்சியா' என்ற தலைப்பில், 5ம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்ற விவாத மேடை நிகழ்ச்சி நடந்தது.
