தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரும் 27ல் 'குரூப் - 4' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

வரும் 27ல் 'குரூப் - 4' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

வரும் 27ல் 'குரூப் - 4' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்


UPDATED : அக் 23, 2026 01:47 PM

ADDED : அக் 23, 2026 01:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 01:47 PM ADDED : அக் 23, 2026 01:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
'காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 'குரூப் - 4' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள், வரும் 27ம் தேதி தொடங்க உள்ளது' என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டி.என்.பி.எஸ்.சி., எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காவலர் உள்ளிட்ட 6,574 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான 'குரூப் - 4' தேர்வு அறிவிப்பு, கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது.

இத்தேர்வுக்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு, பயிற்சி துறை சார்பில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, வரும் 27ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள், தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம்.

மேலும், பயிற்சி தொடர்பான விபரங்களுக்கு, 044 - 2723 7124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us