தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு


UPDATED : ஜூன் 15, 2026 06:21 PM

ADDED : ஜூன் 15, 2026 06:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 06:21 PM ADDED : ஜூன் 15, 2026 06:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கிண்டியில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1, குரூப் - 2, குரூப் - 4 மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு தயாராவோருக்கு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில், இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

அதே போல, ரயில்வேயின் உதவி லோகோ பைலட், குரூப் - டி மற்றும் எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., ஆகிய தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தமிழக வேலைவாய்ப்பு பயிற்சி துறையால் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை 'ஆன்லைன்' பயிற்சியும் வழங்கப்படுகிறது.

தேர்வர்கள், தங்களின் அடையாள அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், நேரில் சென்று பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 93615 66648 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us